கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று தங்கம் விலை ரூ.70 உயர்ந்து 12 ஆயிரத்து 830-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.271-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 71 `ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது.







