அதிமுக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அதிமுக தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.