தமிழ்நாடு காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் கொடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மகேஸ்வர் தயாள் – சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம்.
சந்தீப் மிட்டல்- சைபர் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்.
பி.பாலநாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்.
டி.எஸ்.அன்பு- சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்.
பிரேம் ஆனந்த் சின்ஹா- ஆவடி போலிஸ் கமிஷனராக நியமனம்.
தீபக் எம்.தாமோர்- மத்திய அரசு பணிக்கான ஏடிஜிபியாக நியமனம்.
செந்தில்குமார்- தலைமையிட ஏடிஜிபியாக நியமனம்.
அனிசா உசேன்- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம்.
நஜ்முல் ஹோடா- சென்னை, செயல்பாடுகள் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக நியமனம்.
டேவிட்சன் தேவாசீர்வாதம்- ஆயுதப்படை டிஜிபியாக நியமனம்.
மகேந்தர் குமார் ரத்தோட்- காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக நியமனம்.
கே.சங்கர்- சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம்.
அமல்ராஜ்- தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்.
அபின் தினேஷ் மோடாக்- அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஆக நியமனம்.
தினகரன்- வண்டலூர் தமிழக போலீஸ் பயிற்சி அகாடமி ஏடிஜிபியாக நியமனம்.
மாதவன்- திருநெல்வேலி மாநகரம், மேற்கு மண்டலத்தின் துணை கமிஷனராக நியமனம்.
மதிவாணன்- மதுரை மாநகரம், வடக்கு மண்டல துணை கமிஷனராக நியமனம்.
பாண்டியராஜன்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்பியாக நியமனம்.
மகேஸ்வரி- தமிழக கமாண்டோ படை எஸ்பியாக நியமனம்.
போகார்த்திக் குமார்- பள்ளிக்கரணை, தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமனம்.
இவர்கள் அனைவரும் பதவி உயர்வில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.







