தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விஜய் தரப்பில, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகள் இருப்பதால 15 நாட்கள் கால அவகாசமும் டெல்லிக்கு பதிலாக சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக அனுமதி அளிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் 15 ஆம் தேதி விஜய் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் டெல்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டிருந்த விஜயின் கோரிக்கையை சிபிஐ மறுத்துள்ளது.







