என்ஹைபனிலிருந்து கே-பாப் நட்சத்திரம் ஹீசுங் விலகல்…!

என்ஹைபன் இசைக்குழுவிலிருந்து விலகுவதாக அக்குழுவின் உறுப்பினர் ஹீசுங் அறிவித்துள்ளார்.

தென் கொரியாவின் பிரபலமான கே-பாப் இசைக்குழுக்களில் ஒன்றான என்ஹைபன் இசைக்குழுவிலிருந்து விலகுவதாக அக்குழுவின் உறுப்பினர் ஹீசுங் அறிவித்துள்ளார். இதன் மூலன் என்ஹைபன் இசைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அகுறைந்துள்ளது.

கொரிய ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி ஹீசுங் தனது சொந்த இசைப்பயணத்தை தொடங்க உள்ளார். இதை அறிந்த என்ஹைபன் குழுவும் ஹீசுங்கின் விருப்பத்தை ஆதரித்துள்ளனர். மேலும் ஹீசுங் தனது சொந்த இசை ஆல்பம் ஒன்றிற்கான பணியையும் தொடங்கியுள்ளார்.

 என்ஹைபன் (ENHYPHEN) 

தென் கொரியாவின் பிரபலமான கே-பாப் இசைக்குழுக்களில் ஒன்று என்ஹைபன் (ENHYPHEN) ஆகும். இக்குழு  2020 ஆம் ஆண்டு அறிமுகமனது.

என்ஹைபன் குழுவின் தலைவர் ஜங்வோன் ஆவார். மேலும்  ஜே, ஜேக், சுங்கூன், சுனூ, நி-கி  மற்றும் ஹீசுங் என இக்குழுவில் 7 உறுப்பினர்கள் இருந்தனர்.

தனித்துவமான  இசை,  நடன அமைப்பு மற்றும் சுவாரஸ்யமான கதைக்களங்களால் இக்குழு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது.

என்ஹைபன் இசைக்குழுவால் வெளியிடப்பட்ட பார்டர்: டே ஒன், பார்டர்: கார்னிவல், டைமென்ஷன்: டைலெமா, சடேம், பிளட் தொடர்கள் மற்றும் ரொமான்ஸ்: அன்டோல்ட் அகியவை இசை ஆல்பங்கள் பெரும் வெற்றியடைந்தன.

மேலும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் இக்குழு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.