“நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் நாளை, 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை, சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்த நிலையில் நாளை நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்துகள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். எவ்வித அச்சமுமின்றி முழு தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; எது நடந்தாலும் சரி, நான் எப்போதும் உங்களுடன் துணையாக நிற்பேன். உங்களின் உரிமைகளையும், எதிர்காலத்தையும் நான் தொடர்ந்து பாதுகாப்பேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.