சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் சிலர் சட்டவிரோதமாக பொருட்களை கடத்திவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது.
இதையும் படியுங்கள் : Rain Alert | 8 மாவட்டங்களில் அடித்து வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
இதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் இருந்த இளைஞர் ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, சூட்கேஷில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 971 கிராம் போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் சென்னை விமான நிலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.








