வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இந்த புயல் சின்னம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில், வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது.
தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில், மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக இன்று மாலைக்குள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது







