கோவையில் கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஆறுதல்!

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோருக்கு எதிர்க்கட்சித் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்ட்டுள்ள செய்தி குறிப்பில், “ஏற்கெனவே சட்டசபையில் அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்தபோது, திங்கள் அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். ‘’உதயநிதி சார்தான் நீதி பெற்று தர வேண்டும்’’ என்று அமுதனின் தாயாரும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

இன்று அமுதனின் பெற்றோரைத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அமுதனின் மரணத்துக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் திங்கள் அன்று சட்டசபையில் இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும் அமுதனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை, அமுதனின் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து போராடுவதாகவும் உறுதிபட தெரிவித்தார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.