செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்!

செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் இணைந்து 2024-ல் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினரானது. இந்தோனேசியா 2025-ல் இந்த அமைப்பில் இணைந்ததன் மூலம், முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது.

2026-ஆம் ஆண்டுக்கான 18-வது பிர்க்ஸ் மாநாடு மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலிடமிருந்து பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜூன் மாதம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதில் இந்தியா ஒரு “பெரிய பங்கை” ஆற்ற முடியும் என்றும், இந்தியாவின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.