“அஜித்தோ… விஜய்யோ அல்ல… இந்த தென்னிந்திய நடிகருடன் நடிக்க ஆசை” – மலையாள திரையுலகில் கால்பதிக்க விரும்பும் ஆலியா பட்!

நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகமான நடிகை ஆலியா பட், இந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இந்த ஆண்டும் தனது தோற்றத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் இந்த விழாவின் போது ப்ரூட் இந்தியாவுக்கு பேட்டியளித்த அவர், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை மிகவும் மதிக்கிறேன். ஆவேஷம் எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஃபஹத் நம்ப முடியாத மிகச்சிறந்த நடிகர். ஒருநாள் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இது ஃபஹத் ஃபாசில் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு நடிகர் ரன்பீர் கபூருடன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆலியா தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.