தமிழகத்தின் பெயரை ‘தட்ஷிணபிரதேஷ்’ என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கருக்கு ஆதரவாக அகரம் சீகூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பாஜகவை தோளில் சுமந்து கொண்டு அதிமுக வருவதாகவும், தமிழகத்தையும், அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமி நரேந்திர மோடியிடம் அடகு வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மோடியும், அமித்ஷாவும், தமிழகத்தை குறி வைத்துள்ளதாகவும், தமிழகத்தின் பெயரை தட்ஷிணபிரதேஷ் என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத காரணத்தால் மோடியும் அமித்ஷாவும் கனவுடன் தமிழகத்திற்கு அடிக்கடி வருவதாகவும், மோடி ஒவ்வொருமுறை தமிழகம் வரும் போதும் திமுக கூட்டணியின் வெற்றி சதவிகிதம் கூடுவதாகவும் அவர் கூறினார்.







