தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு- பழனி இடையேயான சாம்ராஜ் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
தாராபுரம் தொகுதி வேட்பாளரும் தமிழகத்தின் பாஜக தலைவருமான எல்.முருகன் தாராபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், தாராபுரம் வழியாக பழனி, சபரிமலை, வேளாங்கண்ணி ஆகிய ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற மண்டபம் அமைக்கப்படும் என்றார்.
தாராபுரத்தில் தானிய உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தொகுதிக்கு தேவையான பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக எல்.முருகன் உறுதியளித்தார். மேலும் தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு – பழனி இடையேயான சாம்ராஜ் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.







