டி20 மகளிர் உலக கோப்பை : நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!

பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் (குரூப் ஏ) பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பெரோஷா அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி தரப்பில் ஐரிஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இறுதியில் நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.