கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என வேதாரண்யம் பரப்புரையில் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். தற்போது, 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ள தமிழகத்தை மீட்க ஐந்தாண்டுகள் போதாது என்பதால், பத்து ஆண்டுகளுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது பேசிய அவர், நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் தளம், கடல் உணவு பூங்கா அமைக்கப்படும் எனவும், கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். கஜா புயல் தாக்கியபோது, நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் எனவும் உறுதியளித்தார்.







