திமுக கூட்டணி சமூக நீதி கூட்டணி எனவும், அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்தை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜகவிற்கு அடிபணிந்துள்ள அதிமுக கட்சி, திமுகவை எதிர்க்கும் கட்சி என்ற தகுதியை அதிமுக இழந்து விட்டதாக சாடினார்.
அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் திமுகவிற்கு கிடைக்க கூடாது என்பதற்காக, சில கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக விமர்சனம் செய்த திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு பின்னர் நீர்த்து போய்விடும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.







