முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 5 பெண் ஓதுவார்கள் நியமனம்- பணி நியமனம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு..!

மத வெறியை தூண்டும் வகையில் அறநிலையத்துறையின் செயல்களை அவமதிப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், கோயில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

5 ஆண்டுகளில் 714 பழைமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்படும் என தெரிவித்தார். ஓதுவார்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். விமர்சனத்தை பார்த்து கோவப்படாமல், சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் ஆட்சி திமுக ஆட்சி எனவும் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.ஆணுக்கு பெண் நிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு செயல்பாட்டில் ஏற்கனவே 5 கோயில்களில் பெண் ஓதுவார்கள் இருக்கிறார்கள் என்றும் இதுவரை 10 பெண் ஓதுவார்கள் மொத்தம் உள்ளதாகவும், 107 பணி இடங்கள் நிரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உபயதாரர்கள் மூலம் 750 கோடி நிதி இந்து அறநிலையத்துறைக்கு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் 1000 கோடி ரூபாய்
வழங்கினார், மற்ற நிதிகளில் 60 கோடி ரூபாய் வந்துள்ளது என்றும், மத வெறியை தூண்டும் வகையில் இந்து அறநிலையத்துறையின் செயல்களை அவமதித்து விமர்சிப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

”நான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்கிறார்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம்! உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டிராவல்ஸ் மீது வழக்குப்பதிவு!

Web Editor

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading