“தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை” – #ADMK முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை எனவும், ஆளும் கட்சிக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்…

"AIADMK is not even affected by the heat wave" - ​​#ADMK ex-minister RB Udayakumar interview!

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை எனவும், ஆளும் கட்சிக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது.

திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சிக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும். தவெக கொள்கைகள் வரவேற்கத்தக்கது.

அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.