முக்கியச் செய்திகள்இந்தியாFact Check Stories

பிரதமர் மோடி போல் தோற்றம் கொண்ட நபரின் வீடியோ வைரல்…! உண்மை என்ன?

This News Fact Checked by ‘Vishvas News

பிரதமர் நரேந்திர மோடி பேல்பூரி தயாரிப்பதாக பகிரப்பட்டு வரும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை ஒத்த தோற்றத்தில் பேல்பூரி போன்றவற்றை தயாரிப்பதைக் காணலாம். இந்நிலையில் பிரதமர் மோடியே பேல்பூரி தயாரிப்பதாக நகைச்சுவையாக, ​​இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டது.

வைரலான இந்த வீடியோவை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்ததில் இந்த செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டது. வீடியோவில் காணும் நபர் பிரதமர் மோடியை போன்று உள்ளார் எனவும், அந்த நபரின் பெயர் ஆனந்த் பாய் எனவும் கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

முகநூலில் சாஹில் கான் என்ற பயனர் ஏப்ரல் 27-ம் தேதியன்று வைரலாகும் இந்த வீடியோவை, “சார் ஏற்கனவே வேலையை ஆரம்பித்துவிட்டார், மூன்றாம் கட்ட தேர்தல் இன்னும் பாக்கி இருக்கிறது” என தலைப்பிட்டு #naxtpmrahulgandhi, #LokSabhaElection2024. #RahulGandhi என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

விஷ்வாஸ் நியூஸ் இந்த வீடியோ குறித்த தனது உண்மை சரிபார்ப்பை தொடங்கியது. முதலில் இந்த வீடியோவில் உள்ள சில முக்கிய வார்த்தைகள் யூடியூபில் தேடப்பட்டது. அப்போது, News Nation என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ இருப்பது கண்டறியப்பட்டது. வைரலான வீடியோவில் காணப்பட்ட அதே நபர் நியூஸ் நேஷன் பதிவிட்டுள்ள வீடியோவில் அடையாளம் காணப்பட்டது. குஜராத் மாநிலம் ஜூனாகத்தை சேர்ந்த அனில் பாய் தக்கர், பிரதமர் மோடியை போல் இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.

News Nation யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

ஏப்ரல் 25-ம் தேதியன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவின் விளக்கத்தில், “இந்த கோல்கப்பா (சாட் வகை உணவு) விற்பனையாளர் குஜராத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார். பிரதமர் மோடியைப் போலவே தோற்றத்தில் அனில் தக்கர் இருக்கிறார். அனில்பாய் தக்கர் ஜூனாகத்தில் வசிப்பவர். இவருக்கு முன் இவரது தந்தையும், தாத்தாவும் கோல்கப்பா (சாட் வகை உணவு) கடை நடத்தி வந்தனர். அனில் தக்கர் தனது 18வது வயதில் இருந்து கோல்கப்பா கடையை நடத்தி வருகிறார்” என பகிரப்பட்டிருந்தது.

India News யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

இது தொடர்பான வீடியோ Aaj Tak யூடியூப் சேனலிலும் கண்டறியப்பட்டது. விஸ்வாஸ் நியூஸ் சார்பாக Gujarati Jagran நிறுவனத்தின் இணை ஆசிரியர் ஜீவன் கர்பூரியா தொடர்பு கொள்ளப்பட்டார். இது குறித்து தகவல் அளித்த அவர், வைரலான வீடியோ, பிரதமர் மோடியை போன்று இருக்கும் ஆனந்த் பாயின் வீடியோ என தெளிவுபடுத்தினார்.

Aaj Tak யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

வைரலான வீடியோவைப் பகிர்ந்த பயனர் குறித்த விசாரணையில், சாஹில் கானை 3.8 ஆயிரம் பேர் பின்தொடர்வதாகவும், அவர் டெல்லியில் வசிக்கிறார் எனவும் கண்டறியப்பட்டது.

முடிவு:

விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடியைப் போல தோற்றமளிக்கும் ஆனந்த் பாய் தக்கரின் வீடியோவை, சிலர் கிண்டலாக  பிரதமருடன் தொடர்புபடுத்தி வைரலாக்கி வருகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டது.

Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைக்க கூடாது – சீமான்

Web Editor

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar

மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading