சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் நெல் அறுவடைக்கு பின்னர் விவசாய பாசன கண்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்போது மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா, 3 கிலோ எடை கொண்ட விரால் உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து கொண்டு வீடு திரும்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பில்லருத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட மணக்குளம், சூரக்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பறையன் குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இத்திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வலை, கச்சா உள்ளிட்ட மின்பிடி உபகரணங்களை கொண்டு பிடித்த மக்களுக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட கட்லா, கெளுத்தி, விரால் போன்ற மீன்கள் கிடைத்தன. இதனை தாங்கள் கொண்டு வந்த சாக்குபைகளில் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா