முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

காசி நகரத்தை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின்  புனித நகரமாக கருதப்படும் வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் முயற்சித்து வருகிறார். இந்த மாவட்ட  ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் ஒரு தமிழர். இவர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்தவர்.  இவர் முன்னெடுத்துள்ள “யாசகர் இல்லா காசி” எனும் திட்டத்திற்கு  பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பழமையான காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ள  வாரணாசிக்கு தினந்தோரும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள  கங்கை கரை, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்புகள்  மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் யாசகர்களும் அதிக அளவில் காணப்படுகின்றனர். இந்த யாசகர்களால் காசிக்கு வரும் பயணிகளுக்கு  தொல்லை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனையும் படியுங்கள்: குஜராத்-தமிழ்நாடு இடையேயான பிணைப்பை சௌராஷ்டிரா சங்கமம் வலுப்படுத்துகிறது- பிரதமர்

எனவே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட  எஸ். ராஜலிங்கம், யாசகர்கள் இல்லாத காசி’ எனும்  திட்டத்தை அப்னாகர் எனும் பொதுநல அமைப்பு, நகராட்சி நிர்வாகம்  மற்றும் காவல்துறை உதவியுடன் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக  யாசகர்கள் குறித்து அரசு சார நிறுவனங்கள்(NGO) மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு யாசகர்கள்  இருக்கும் இடத்திற்கே  சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தில் யாசகம் பெறுவதை கைவிடுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்  இச்செயல் சட்டப்படி குற்றம் எனவும்  15 நாட்களுக்கு உளவியல் பயிற்சி வகுப்பும் நடத்தப்படும் எனவும் யாசகம் பெறுவதை நிறுத்தினால் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல  யாசகம் பெறுவதற்காக சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்தும் சமூக விரோத கும்பலும் இதில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களை பள்ளிகளில் சேர்த்து கல்வி அளிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரொட்டி வங்கி திட்டம்

வாரணாசி ஆட்சியரின் இந்த முயற்சி ‘ரொட்டி வங்கி எனும் திட்டத்துடன் சேர்த்து அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி உணவகங்கள், வீடுகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் ரொட்டி மற்றும் உணவுகள்  சேகரிக்கப்பட்டு அவை யாசகர்களுக்கு அளிக்க உள்ளன. மேலும் இவர்களுக்காகவே ரொட்டி செய்து தானமாக அளிப்பவர்களும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

G SaravanaKumar

திரிபுரா முதல்வருக்கு கொரோனா!

Gayathri Venkatesan

நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு

Jayasheeba