முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!

ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் விதமாக அஞ்சி ஆற்றின் மேல் கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாஷி மாவட்டத்தில் பல்வேறு கால சூழ்நிலைகளில்
சவால்கள் நிறைந்த மலை பகுதிகளில் ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் விதமாக இந்தியன் ரயில்வே மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக வயர் மூலம் அமைக்கப்படும் அஞ்சி காட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவில் இருந்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டும் என்றால் வான் வழியாக விமானம் மூலம் செல்லலாம். தரை வழி
போக்குவரத்தை பொறுத்தவரை 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை ஆகும். அதுவும் மிக உயரமான ஆபத்தான சாலைகளை கடந்தே செல்ல முடியும்.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருக்க கூடிய ஜம்மு மற்றும் காஷ்மீரை இரயில் பாதை மூலம் இணைத்து பயணிகளின் சிரமத்தை குறைக்கவும், சுற்றுலாபயணிகளின் வருகையை அதிகரிக்கும் விதமாகவும் இந்தியன் ரயில்வே இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது.ஜம்முவில் இருந்து உதம்பூர் – கட்றா வரை தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் மறு மார்க்கத்தில் பாரமுல்லா, ஸ்ரீநகர்,பணிஹால் வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. பணிஹால் – ரியாஷி – கட்றா வரையிலான இயில் பாதை பணியே மிகுந்த சவால்கள் நிறைந்த, அதிகளவிலான மலை பாதைகளையும், குகை பாதைகளையும் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

குறிப்பாக பணிஹால் முதல் கட்றா வரை 111கி.மீ. பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 97கிமீ தொலைவிற்கு டணல் பாதைகள் மட்டுமே அமைக்கப்படுகிறது. 3 கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள குகைபாதையில் கூடுதல் குகை பாதை அமைக்கப்படுகிறது. அஞ்சி ஆற்றின் மீது அமைந்துள்ளது இந்த பாலம். மொத்தம் 473.25 மீட்டர் நீளம் கொண்டது. 96 கேபிள்கள் மூலம் இந்த பாலம் தாங்கி நிற்கிறது.

இத்திட்டத்தின் முக்கியமான பகுதிகள் அனைத்தும் கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாக 205 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் அமைத்த பிறகே பணிகள் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஞ்சி பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதி ஹிமாலய மலைப் பிரதேசங்களுக்கு இடையே பல்வேறு கால சூழ்நிலைகளுக்கு இடையே சுமார் 116 கிலோமீட்டர் காற்றின் வேகம் அடித்த போதிலும் தாங்கி நிற்கக்கூடிய அளவிற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் இந்த பணிகள் நிறைவு பெற்று ஜனவரி மாதம் துவங்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இத்திட்டம் நிறைவு பெற்றால் சுற்றுலா பயணிகளின் சிரமங்கள் குறைந்து வருகை
அதிகரித்தாலும் இந்தியாவின் கடை கோடியான கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ரயில் பாதை திட்டம் முழுமை அடையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

  • தலைமைச் செய்தியாளர் எம்.சுடலைகுமார் நியூஸ்7 தமிழ், ஜம்மு காஷ்மீர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் போக்குவரத்தை மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றலாம் – மக்கள் கருத்து

Dinesh A

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

Halley Karthik

மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு

Arivazhagan Chinnasamy