தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜூன் மாத தொகுப்பில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய, 42 லட்சம் தடுப்பூசிகளில், 5 லட்சம் தடுப்பூசி மட்டுமே கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மாநிலத்தில் 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் ஒரு கோடியை எட்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.