மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து குளிர் சேமிப்பு வசதி கொண்ட வாகனம் வாயிலாக சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.