முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?


கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது.  இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த  இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. 

இந்நிலையில், கொரோனா தொற்றால் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் செலுத்திக் கொண்டதால் போதுமானது என்று எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவனை இணைந்து நடத்திய இந்த  ஆய்வில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. லேசான தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 70 விழுக்காட்டினரின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement:
SHARE

Related posts

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Ezhilarasan

உரக்கச் சொல்..நான் Gay என்று!

Saravana Kumar

ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினார் ஜோ பைடன்!

Jayapriya