4ம் கட்ட மக்களவைத் தேர்தல் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு நாளை (13ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதியும் (நாளை) , 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள் : “ஜூன் 4ம் தேதி I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி” – தேர்தல் பரப்புரையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியபிரதேசம் (8 தொகுதிகள்), மராட்டியம் (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலங்கானா (17 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (8 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், நளை காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.








