Fact Check : இந்து தெய்வங்களை காங்கிரஸ் இழிவுபடுத்தியதா? – வைரலாகும் வீடியோ உண்மையில்லை!

This News is Fact Checked by Boom இந்து தெய்வங்களை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது எனக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ போலியானது என நிரூபணம் ஆகியுள்ளது. பாஜகவின் போராட்டத்தில் கலந்து கொண்ட…

This News is Fact Checked by Boom

இந்து தெய்வங்களை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது எனக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ போலியானது என நிரூபணம் ஆகியுள்ளது. பாஜகவின் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்ணின் படத்தை பதிவிட்டு காங்கிரஸ்காரர்கள் செய்ததாக பரவும் வீடியோவை போலி என Boom உண்மை சரிபார்ப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கடந்த மே5ம் தேதி சமூக வலைதளங்களில் ஒரு காணொலி பரவியது அந்த காணொலியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் இந்து கடவுள்களை இழிபடுதியதாகவும், இந்து கடவுள்களின் படங்கள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

இந்து கடவுள்களை இழிபடுத்தியதாக காணொலி :

மத்தியப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை  (மே13) 8 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்களது பிரச்சார உரைகளில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளை குறிவைத்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மே மாதம் 5ம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு காணொலி பரவியது. அந்த காணொலியில் புடவை அணிந்த பெண் ஒருவர் அங்குள்ள இந்து கடவுள்களின் படங்கள் இடம்பெற்ற ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது போல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த வீடியோவின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

“ ஜெய் ஸ்ரீ ராம். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்துக் கடவுள் மற்றும் சனாதன மதத்தின் கடவுள் படங்கள் மீது காலணிகளுடன் நடனமாடுகிறார்கள். 65 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் அர்த்தத்தை இந்து மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். நான் ஒரு சனாதன இந்து. இனிமேல் நானும் என் குடும்பமும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டோம்” என எழுதப்பட்டிருந்தது.

உண்மை என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் ம.பி. மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ஜித்து பட்வாரி பாஜக பெண் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  இமார்தி தேவிக்கு எதிரான மோசமான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஜித்து பட்வாரியின் இல்லத்திற்கு வெளியே பாஜகவின் மகிளா மோர்ச்சா பிரிவு போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வைரலான மேற்சொன்ன வீடியோவை பூம் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வு செய்தது.  அதன்படி அந்த வீடியோவில் இருக்கும் பெண் பாஜகவின் கொடி நிறத்தில் அணிந்திருந்த துண்டில் இருந்து குறிப்பைப் பெற்றது. இதன் பின்னர் “பாஜக பெண் உறுப்பினர்கள் போஸ்டர்களைக் கிழித்தனர்” என்று கூகுளில் முக்கிய வார்த்தைகளைத் தேடினர். இதிலிருந்து சிலதகவல்கள் கிடைக்க பெற்றன. மேலும் ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் (Free Press Journal) செய்தி அறிக்கை வைரலில் காணப்பட்ட அதே காட்சிகளுடன் கிடைத்தது.

இந்த காணொலி மே 3, 2024 அன்று, முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான இமார்தி தேவியை அநாகரீகமான பேசிய காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரிக்கு எதிராக பாஜக மகிளா மோர்ச்சா பிரிவைச் சேர்ந்த பெண்கள் இந்தூரில்  ஜித்து பட்வாரியின் இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த செய்தியில் வைரலான வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் கொண்ட ஒரு X ஃப்ரீ பிரஸ் ஜர்னல்  சேர்த்துள்ளது. அந்த பதிவில்  “பாஜக மகிளா மோர்ச்சாவின் வெட்கக்கேடான செயலைப் பாருங்கள், காங்கிரஸின் மீதான வெறுப்பு காரணமாக அவர்கள் கடவுள் ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமான் படங்களை கூட தங்கள் காலடியில் போட்டு  மிதிக்கிறார்கள்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.  இமார்தி தேவி மீது ஜிது பட்வாரியின் தான் சொன்ன கருத்திற்காக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொய் பிரச்சாரம்

காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாகவும்,  இந்து கடவுள்களின் படங்கள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் பரவும் வீடியோ போலியானது திரித்து பரப்பப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் அதிகாரப்பூர்வமான நிரூபணம் ஆகியுள்ளது.

Note : This story was originally published by ‘Boom’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.