இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய விவகாரம் – குஜராத் காவலர்கள் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள்,…

இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 இஸ்லாமியர்கள், பொதுவெளியில் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு குஜராத் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  நான்கு காவல்துறையினரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர்.

முன்னதாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நான்கு காவலர்களும் இழப்பீடு வழங்க முன் வந்த போது,  அதனை ஏற்க அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், நான்கு காவலர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும், ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துறை துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

கைது நடவடிக்கை மற்றும் விசாரணையில் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே முந்தைய வழக்குகளின் போது வழங்கிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பிற்கு நான்கு காவல்துறையினரும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.