அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தின் மேயருக்கான தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். இதன் மூலம் நியூ யார்க் மேயராகப் பதவியேற்கும் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
புத்தாண்டு தினமான இன்று அதிகாலை, நியூயார்க்கில் கைவிடப்பட்ட பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார். மேலும் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
ஹமாஸ் ஆதரவாளராகவும், கம்யூனிச சித்தாந்தங்களை பின்பற்றுபவராகவும் அறியப்படும் மம்தானிக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.







