முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது .

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு பகுதிகளில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகும். இந்த சிலைகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் சிலைகள் அனைத்தும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது . இதற்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளியிடம் மூன்று சிலைகளையும், அதற்கான ஆவணங்களையும் ஒப்படைத்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Halley Karthik

விக்ரம் படம் வெளியாகி 25 நாளில் செய்த வசூல் சாதனை என்ன தெரியுமா?

Web Editor

பறவை இனங்கள் அழியும் அபாயம்; காக்கும் பணிகளில் நரிக்குறவர் சமூகம்

G SaravanaKumar