சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக கள ஆய்வு

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.   கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர்,…

சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்றும் முதலமைச்சர்  நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

இதனையும் படிக்க : ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

“கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். மக்களின் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் இலக்கு.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்க முகவரி துறை உருவாக்கப்பட்டுள்ளது “ என முதலமைச்சர் கூறினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.