தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என மத்திய பாஜக அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம் ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! திராவிட மாடல் 2.0 அமையட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







