இந்திய பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி

நாட்டின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக  பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை, தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  பழங்குடியின மக்களின்  கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக,…

நாட்டின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக  பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை, தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

பழங்குடியின மக்களின்  கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததார் .

இந்நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-9 ஆண்டுகளில், ஆதி மஹோத்சவம் போன்ற பழங்குடியின மக்களின் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற பல நிகழ்வுகளில் நானும் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். பழங்குடியின சமூகத்தின் நலன் என்பது எனது தனிப்பட்ட அக்கறை மற்றும் உணர்வுகள் போன்றது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், 21ம் நூற்றாண்டில் இந்தியா ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற மந்திரத்தின்படி முன்னேறி கொண்டிருக்கிறது. முந்தைய அரசுகளின் ஆட்சியின் போது, ​​மூங்கில் வெட்டுவது மற்றும் அதன் பயன்பாடு சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கிலை புல் வகைக்குள் கொண்டு வந்து அதன் மீதான தடைகளை எல்லாம் நீக்கி விட்டோம். இதன் மூலம் மூங்கில் பொருட்கள் பெரிய தொழிலாக மாறி வருகிறது.

இன்று, இந்தியாவின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பழங்குடி சமூகத்தால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூங்கில் பொருட்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.