திமுக ஒரு குடும்ப கம்பெனி போல் ஆகிவிட்டதாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் ஆவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது? என விமர்சித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக விவசாயியாகிய எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதாலும், சமூக நீதிக்காகவும் தான் அதிமுகவுடன் , பாமக கூட்டணி வைத்தாகக் அன்புமணி கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியை சேர்ந்த 38 பேர் வெற்றி பெற்று, தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்றும், அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.







