காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து; இந்தியாவிற்கு பாகிஸ்தான் நிபந்தனை!

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்வரை இந்தியாவுடனான வர்த்தக உறவில் இழுபறியை நீட்டிக்க பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. கடந்த 2019ல் மத்திய அரசு ஜம்மு, காஷ்மீர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்வதாக அறிவித்திருந்து.…

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்வரை இந்தியாவுடனான வர்த்தக உறவில் இழுபறியை நீட்டிக்க பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது.

கடந்த 2019ல் மத்திய அரசு ஜம்மு, காஷ்மீர் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்வதாக அறிவித்திருந்து. இந்நிலையில், இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அனுதிமயை மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரமர் இம்ரான்கான் ஆகியோர்களுக்கிடையே கடித போக்குவரத்து நடைபெற்றது. மேலும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து பருத்தியும், சர்க்கரையும் பாகிஸ்தானில் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. அந்நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு இந்த இறக்குமதியை உறுதி செய்திருந்தது.

இந்த ஆலோசனையின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் நிதியமைச்சர் ஹம்மத் அசார், பாகிஸ்தானில் பருத்தியின் விலையை கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அந்நாட்டில் பருத்தி மற்றும் சர்க்கரைக்கான தேவை பரவலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி சேவைகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், தற்போது அரசியல் அழுத்தங்களின் காரணமாக தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்வரை இம்மாதிரியான வர்த்தக உறவுகள் இருக்காது என்றும் புதிய நிலைபாட்டினை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.