ஆப்கானிஸ்தான் – கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருகில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருகில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் அங்குள்ள ஆறுகள், நீர்நிலையில் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகியது.

வெள்ளப்பெறுகினால் 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எனவே அங்குள்ள மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேடும் பணியில் தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வெள்ள சேத மதிப்பை கணக்கிட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலீபான் அரசாங்கம் ஒரு குழுவை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.