சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். அதன் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறியால் விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்து குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







