மலைக்கிராமம் முதல் சிறிய கிராமம் வரை, தரமான சாலைகளை அமைத்து பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான், என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோட்டூர், கீழ்சீங்காடு, குண்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில்தான் மலை கிராமங்களுக்கும், சிறிய கிராமங்களுக்கும், தரமான தார் சாலை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், விளைப்பொருட்கள் எளிதான முறையில் சந்தைப்படுத்தும் விதமாக, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.







