தமிழ் நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு…!

தமிழ் நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழ் நாட்டில் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் படி நேற்று வரை  விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 5) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற ஏராளமான மாணவர்கள், நேற்று முதல் சென்னைக்குத் திரும்பத் தொடங்கினர். இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையியங்களில்  கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புத்தாண்டில் முதன்முறையாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதனையொட்டி பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.

அதே நேரம் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்படதகுந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.