நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஹோட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப் மூலமே பிடித்த ஊரில் உள்ள பிடித்த ஹோட்டலின் உணவை ஆர்டர் செய்யலாம். இது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.
இத்திட்டத்திற்காக ஐஆர்சிடிசி உடன் ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜி மற்றும் வாட்ஸ்அப் சாட்புட் சொலியுஷன், ஜூப் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இவர்கள் ரயில் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய நகரங்களில் செயல்படும் பிரபல உணவகங்களுடன் கைகோர்த்துள்ளனர். இந்த உணவகங்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் பயணிகளின் ரயில் இருக்கைக்கே இந்த உணவு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பயணிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
- உங்களது மொபைலில் +91 70420 62070 என்ற எண்ணை பதிவு செய்துவிட்டு வாட்ஸ் அப்பில் Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- உடனே உங்களுக்கு ஜூப் நிறுவனத்தில் இருந்து ஒரு மெசேஜ் வரும். அதில் உணவை ஆர்டர் செய்ய வேண்டுமா ? அல்லது பிஎன்ஆர் எண்ணை சரி பார்க்க வேண்டுமா ? அல்லது நீங்கள் ஆர்டர் கொடுத்த உணவின் நிலை என்ன என்பதை அறிய வேண்டுமா ? அல்லது புகார் ஏதாவது தெரிவிக்க வேண்டுமா ? என மெசேஜ் வரும்.
- அவர்கள் பரிந்துரைத்துள்ள ஹோட்டல்களில் என்ன உணவு வேண்டும் என்பதை ஆர்டர் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது பிஎன்ஆர் எண்ணையும் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் கொடுத்த பிஎன்ஆர் எண் சரிதானா என்ற பரிசோதனை முடிந்த பின்னர் உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படும்.
- நீங்கள் பரிந்துரைக்கும் ரயில் நிலையத்தில் உங்களுக்கான உணவு கொண்டு வந்து கொடுக்கப்படும். அதற்கு முன்னர் அந்த உணவிற்கான பில்லை ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு பிடித்த ஊரில் உள்ள பிரபல உணவகத்தின் உணவை பயணத்தின்போது மகிழ்வுடன் சுவைக்கலாம்.
இராமானுஜம்.கி








