முக்கியச் செய்திகள் தமிழகம்

உதவி ஆய்வாளருக்கான உடல் திறன் தகுதித் தேர்வு; சென்னையில் நடைபெற்றது

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான உடல் திறன் தகுதித் தேர்வு சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான உடல் திறன் தகுதித் தேர்வு சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், இதுவரை தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி முடிவுற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு முழுவதும் 197 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 949 ஆண்கள், 43 ஆயிரத்து 949 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர்கள் தேர்வு எழுதினர். இதில், சென்னையில் மட்டும் 7,080 ஆண்கள், 1,506 பெண்கள் என 8 ஆயிரத்து 586 பேர் தேர்வு எழுதினர். நடைபெற்று முடிந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு அந்தந்த மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்தி: ‘‘ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ – ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா’

அந்த வகையில், சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், நேரடி உதவி காவல் ஆய்வாளருக்கான எழுத்துத் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட் 22ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

சென்னை கோட்டத்தில் 650 பேருக்கு 1,500 மீட்டர் இலக்கை 7 நிமிடங்களில் அடைய வேண்டும் என்ற உடல் தகுதித் தேர்வு நடத்தப் பட்டதில், இதில் தேர்ச்சி பெற்ற 267 பேருக்கு இன்று நீளம் – உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற தகுதி உடல் திறன் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு, நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, ஒரு வருடக் காவல் பயிற்சிக்குப் பின்னர் அந்தந்த மண்டலத்தில் பணி அமர்த்தப்படுவர்
என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

Arivazhagan Chinnasamy

சென்னையில் பழமைவாய்ந்த ராவணன் சிலை மீட்பு

Halley Karthik

முகக்கவசம் அணியாத 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! – காவல்துறை அதிரடி

Gayathri Venkatesan