முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் தமிழகம் செய்திகள்

வாகன தயாரிப்பில் அசத்த போகும் பெண்கள்..! அசோக் லேலண்ட்டின் புதிய முயற்சி.!

இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும், அசோக் லேலண்ட் நிறுவனம், ஓசூரில் உள்ள தனது நிறுவனத்தில், முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கு பெறும் ஒரு புரொடக்சன் லைனை தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் மதம் முழுவதுமே பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். பெண்கள் தினத்தன்று மட்டுமே பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படாமல், ஒவ்வொரு நாளும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களை முன்னிலைப்படுத்தி, பல்வேறு விதமான செயல்படுத்தினால், அது பெண்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பல்வேறு முன்னெடுப்பு நிகழ்வுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலின சமத்துவதத்தை அனைவருக்கும் எடுத்துச்செல்லும் வகையில் நிகரான கொள்வோம் என்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியையும், மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதிலும் மாணவர்களிடமிருந்து அந்த மாற்றங்களை தொடங்க வேண்டும் என்ற கருத்தை நியூஸ் 7 தமிழ் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அணைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து, தினமும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் தாங்களாவே முன் வந்து பாலின சமத்துவ உறுதிமொழிகளில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றன. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இந்த மாபெரும் முன்னெடுப்புக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும், இன்னுமொரு முக்கியமான நிகழ்வு ஒன்று தமிழகத்தில் ஓசூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. முழுக்க முழுக்க
பெண்களுக்காகவே இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம் சிறப்பான செயல் ஒன்றை செய்து காண்பித்துள்ளது.

ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கு பெறும் புரொடக்சன் லைன் ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரிய கூடிய ஒரு அறிய வாய்ப்பை அந்நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் பெண்கள் எந்த வகையிலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வாய்ப்பு நிச்சயம் அமையும்.

அசோக் லேலண்டின் ஓசூர் தொழிற்சாலையில் புதிய என்ஜின் லைனில் பணியமர்த்தப்பட்டுள்ள 80 பெண் தொழிலாளர்கள் அந்த ஆலையில் தயாரிக்கப்படும் கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜின்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக பெண் தொழிலாளர்களை பயிற்றுவிக்கவும், அவர்களிடம் இருக்கும் திறமைகளை மேம்படுத்தவும், வெளிக்கொண்டுவரவும் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி முதலீடு செய்துள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம்.

இதனையும் படியுங்கள்: மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!

மேலும் இந்த ஓசூர் அசோக் லேலண்ட்டின் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த 80 பெண் பணியாளர்கள் H1 யூனிட்டில் புதிய B15 ரக என்ஜின்களை உற்பத்தி செய்து , செம்பிள் செய்வது மட்டுமின்றி, வாகனத்தில் பொருத்துவதற்கு முன்பாக மேற்கொள்ளபப்டும் சோதனைகளையும் அவர்களே செய்ய உள்ளனர். புதிய B15 என்ஜின் ஆனது எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்ட்களாக இயங்க உள்ள இந்த புதிய தயாரிப்பு லைனில் வருடத்திற்கு 62,000 என்ஜின்களை உருவாக்க அசோக் லேலண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அசோக் லேலணட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷேனு அகர்வால்.பேசும் போது, பாலின மற்றும் இன வேறுபாடின்றி, எல்லோரும் சமம் என்பதை நிரூபிக்கும் விதமாக இது போன்ற வாய்ப்புகளை அசோக் லேலண்ட் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக பெருமையுடன் கூறினார்.

மேலும், பெண்களிடம் இருக்கும் திறமைகளை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி , அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பாலின சமநிலையை ஏற்படுத்தி எல்லோரும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என ஷேனு அகர்வால் தெரிவித்தார். நல்ல முயற்சி பெரிய வெற்றியின் தொடக்கம் என்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி எப்படி நிகரென கொள்வோம் என்ற பாலின சமத்துவ உருதி மொழியை முன்னெடுத்துளள்தோ..அப்படியான ஒரு முயற்சியை அசோக் லேலண்ட் நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின்சாரக் கட்டணம்?

Arivazhagan Chinnasamy

கிடப்பில் மழைநீர் வடிகால் பணிகள் – ஜி.கே.வாசன்

Web Editor

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம்!

Saravana