உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது.  பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3-ஆவது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று…

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. 

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3-ஆவது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று காலை 6:00 மணி முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  ஆன்லைன் மூலமாக 1784 பதிவு செய்தநிலையில் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 800 மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தகுதி பெற்ற அனைத்து மாடுபிடி வீரர்களும் ஐம்பது பேர் கொண்ட குழுவாக சுமார் 10 சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.  போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக் மற்றும் பீரோ,  கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது

வாடிவாசலில் இருந்து துள்ளிகுதித்து வந்த காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். அதே நேரத்தில் பல காளைகள், வீரர்களை தொடக்கூட விடாமல் களத்தில் நின்று விளையாட்டு காண்பித்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

இறுதியாக 810 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாலை 6 மணி அளவில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.