அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி வாகைசூடிய கார்த்தி 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோவை காணலாம்… பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி வாகைசூடிய கார்த்தி 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோவை காணலாம்…

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று அதிகாலை 6:00 மணி முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை நடைபெற்று அவர்கள் விளையாட்டிற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

சுமார் 6 மணியளவில் நிறைவுபெற்ற இந்த விளையாட்டில், மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி 18 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். இரண்டாவதாக சிவகங்கை பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை பிடித்து 2வது பரிசை வென்றார். மதுரை குன்னத்தூரை சேர்ந்த திவாகரன் 12 காளைகளை பிடித்து 3வது பரிசை வென்றார்.

வெற்றி வாகை சூடிய கார்த்தி, 18 காளைகளை அடக்கிய வீடியோவை காண:

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.