கோயில்களில் பெண்களும் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை துறை அலுவலகத்தில் மண்டல ஆணையர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பதாகைகள் வைக்கப்படும் என்றும் அவற்றில் தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். நூறு நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, பெண்களும் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.







