கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!

 கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  கொரோனா சிகிச்சை பணிகளுக்கு பயன்படுத்திட இலவசமாக 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை எக்ஸ்னோரா எனும் தன்னார்வ அமைப்பு  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அவரது இல்லத்தில் வழங்கியது.…

 கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனா சிகிச்சை பணிகளுக்கு பயன்படுத்திட இலவசமாக 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை எக்ஸ்னோரா எனும் தன்னார்வ அமைப்பு  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அவரது இல்லத்தில் வழங்கியது. முதற்கட்டமாக 36 கருவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நேற்று ஓரே நாளில் 3,26,573 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவே ஒரே நாளில் போடப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று தெரிவித்தார். அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை  தமிழ்நாடு அரசு செய்து  வருவதாகவும், மக்கள் யாரும் முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு  செல்ல வேண்டாம் எனவும்  வேண்டுகோள் விடுத்தார். 

கருப்பு பூஞ்சை  மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அமைச்சர், தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 30 தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தடுப்பூசி கையிருப்பு போதுமான அளவு உள்ளது என விவரித்தார்.  தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக தலைவர்களுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.