எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசியோடு எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றிகரமாக அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, டெல்லி செல்வதறாக அங்கு இருந்த தாமாக தலைவர் ஜி.கே.வாசனும், எடப்பாடி பழனிசாமியை வரவேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித் ஜி.கே.வாசன் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
பணப்பட்டுவாடா செய்வது தெரிகிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
திமுக கூட்டணி கட்சிகள் ஆள் பலம், அதிகார பலம், பண பலத்தோடு தேர்தல் விதிகளை மீறி வருகின்றன. இது தொடர்பாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் முதன்மை கட்சியான அதிமுகவை, ஒன்றரை கோடி தொண்டர்களை வழி நடத்தக் கூடிய பொறுப்பை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அவர் பயணம் வெற்றிப் பயணமாக அமையும்.
ஓபிஎஸ் , இபிஎஸ் இணைவதற்கு பாஜக முயற்சி செய்தது. அது தொடர வேண்டும் என
நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அதிமுக பணிகள் வெகுசிறப்பாக தொடர வேண்டும் மற்றும் பதிலளித்தார்.