பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “துரந்தர்”.
ஆதித்யா தார் இயக்கிருந்த இப்படத்தில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படமானது ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், துரந்தர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ”துரந்தர் : தி ரிவெஞ்ச்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 19 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகின்றது.
இது புதிய இந்தியா.
வீட்டுக்குள் நுழையும்.
கொல்லவும் செய்யும்.Dhurandhar: The Revenge
Teaser Out Now#DhurandharTheRevenge Releasing In Cinemas Worldwide on 19th March 2026 in Hindi, Telugu, Tamil, Kannada & Malayalam.#AkshayeKhanna @duttsanjay @ActorMadhavan @rampalarjun… pic.twitter.com/ym0Y7spnyT— Ranveer Singh (@RanveerOfficial) February 3, 2026







