புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
1. மண்ணடிப்பேட்டை தொகுதி -அமைச்சர் நமச்சிவாயம்
2. முதலியார்பேட்டை – ஜான் குமார் போட்டி
3. ஊசுடு – தீப்பைந்தன்
4. காலாப்பட்டு கல்யாணசுந்தரம்
5. ராஜ் பவன் ராமலிங்கம்
6. முதலியார்பேட்டை – ஜான்குமார்
7. திருநள்ளார் ராஜசேகரன்
8. நிரவி-திருப்பட்டினம் -மீனாட்சிசுந்தரம்
9. மாகே – தினேஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.







