முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவத்துறை நியமனங்களில் மத்திய அரசின் திட்டங்களை திமுக ஏன் ஆதரிக்கிறது-டாக்டர் ரவீந்திரநாத் கேள்வி

மத்திய அரசு திட்டங்களை எதிர்க்கும் திமுக, மருத்துவ துறை நியமனங்களில் மட்டும் மத்திய அரசின் திட்டங்களை ஏன் ஆதரிக்கிறது என டாக்டர் ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டாம் ஆண்டு பட்டயப் பயிற்சி நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புநர்களின்
நலச்சங்கத்தினர் சார்பில் ஆய்வக நுட்புநர்களின் கோரிக்கைகளை வலுயுறுத்தி
தொடர்ந்து அரசிடம் முறையிடுவது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள்
சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள
பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அவர் கூறியதாவது…

”வெயிட்டேஜ் அடிப்படையில் பணியிடங்களை நிரப்பும் அரசாணை 401 ஐ அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தொடங்க இருக்கும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில்
நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில்
அவற்றை நிரப்பிட வேண்டும்.

லேப் டெக்னீஷியன்ஸ் கவுன்சில் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளோம். மேலும்,கொரோனோ காலத்தில் பணி செய்த ஒப்பந்த செவிலியர்களை அரசு பணி நியமனம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் மருத்துவ துறையில் பணி நியமன செய்யக் கூடாது.  எவ்வாறு மாநில அரசு மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கின்றதோ
அதே போல இதனையும் எதிர்க்க வேண்டும். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில்  போராட்டம் நடத்துவோம்.”  என டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய அமைச்சரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Halley Karthik

நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்

EZHILARASAN D

பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு

Dinesh A